10,000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து ஆடி கார் நிறுவனத்தின் இத்தாலி தலைவர் பலி..!
62 வயதான பேப்ரிசியோ லாங்கோ கடந்த 2013-ம் ஆண்டு முதல் இத்தாலியில் உள்ள ஆடி கார் யூனிட்டுக்கு தலைவராகச் செயல்பட்டு வந்தவர் ஆவார். மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டவராக லாங்கோ இருந்து வந்தார்.
இந்த நிலையில் இத்தாலி-சுவிஸ் எல்லைக்கு சில மைல் தூரத்தில் உள்ள அடமெல்லோ மலைத்தொடரில் அமைந்துள்ள சிமா சிகரத்தை நோக்கி மலையேற்றத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். கேபிள்கள், பாதுகாப்பு உபகரணங்கள் என அனைத்தும் இருந்தும் துரதிருஷ்டவசமாக சிகரத்தின் அருகில் செல்வதற்கு முன்னர் 10,000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்துள்ளார்.
அவருடன் சென்ற மற்றொரு மலையேற்ற வீரர் உடனே மீட்புக் குழுவுக்குத் தகவல் தெரிவித்த நிலையில் ஹெலிகாப்டர் உதவியுடன் 700 அடி பள்ளத்தாக்கிலிருந்து அவரது உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே பேப்ரிசியோ லாங்கோ மறைவுக்கு ஆடி நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.