1. Home
  2. தமிழ்நாடு

செல்வப் பெருந்தகை வாயை மூடிக்கொண்டு இருந்தால் அவருக்கு நல்லது. இல்லையென்றால் : எச்.ராஜா..!

1

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. பாஜக அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. எனினும், தமிழ்நாட்டில் பாஜக 11 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதனை வளர்ச்சி என அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகள் பாமகவின் வாக்குகள் என்று கூறியிருந்தார். இதற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக குறித்துப் பேச செல்வப்பெருந்தகைக்கு எந்த அருகையும் இல்லை எனக் கூறியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எச்.ராஜா, “அவர் இதுவரை எத்தனை கட்சிகளில் இருந்தார்? என்ன பொறுப்பு வகித்தார்? அவர் மீது என்ன கிரிமினல் வழக்கெல்லாம் உள்ளது என்பது குறித்து பேச வேண்டி வரும். செல்வப் பெருந்தகை வாயை மூடிக்கொண்டு இருந்தால் அவருக்கு நல்லது. இல்லையென்றால் அவருடைய பின்புலங்களை ஆராய வேண்டிய வரும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பேசிய எச்.ராஜா கூறியதாவது:-

ப.சிதம்பரம் அவர்களுக்கு பொருளாதாரம் தான் தெரியாது என்றால் அவர்களுக்கு கணக்கு கூட தெரியவில்லை. பாஜக ஏற்கனவே 430 தொகுதியில் போட்டியிட்டு மீதியை கூட்டணிக்கு ஒதுக்கியது. அதில் 240 தொகுதி வெற்றி பெற்றது. ஆனால் ப.சிதம்பரம் கணக்கு தெரியாமல் 99 வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார். வயது மூப்பு காரணமாக இதுபோன்று பேசி வருகிறார்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும் எனவும், மோடி அரசு தோல்வி பெற வேண்டும் எனவும் இஸ்ரேலில் உள்ள தனியார் அமைப்பு மூலம் வேலை செய்ததாக விஷயங்கள் வெளிய வந்துள்ளது. இது போன்று தேச துரோக பணி செய்தவர்கள் யார் என்று கண்டறிய விசாரணை நடத்தப்பட உள்ளது. எதிர்க்கட்சிகள் வாக்கு பிரிந்ததால் தான் திமுக வெற்றி பெற்றதே தவிர கடந்த முறை பெற்ற வாக்குகளை விட இந்த முறை திமுக வாக்கு வங்கி குறைந்து உள்ளது.

அனைத்து மதங்களுக்கும், அனைத்து மேம்பாடும் நடைபெற்று கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி, மதப் பிரிவினைகளை உண்டாக்கும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளில் கூட சிறுபான்மையினரை குறிப்பிட்டுப் பேசியது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை குறிப்பிட்டு ஆடுகளை வெட்டிய திமுகவினர் மீது மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like