நாளை முதல் நிரந்தரமாக இயங்காது!
தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை தினசரி இயக்கப்பட்டு வரும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், 19ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முன்னதாக பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, நேற்று முன் தினம் முதல் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டது.
அந்தவகையில் கேரள மாநிலத்தின் பாலக்காட்டிலிருந்து புனலூர் வரை இயக்கப்பட்டு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் பயணிகளின் கோரிக்கையை அடுத்து செங்கோட்டை வரையும், பின்னர் திருநெல்வேலி வரையும் நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்தநிலையில் தூத்துக்குடி வரை இந்த ரயில் சேவை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.