1. Home
  2. தமிழ்நாடு

ஆங்கிலேயர்கள் படையெடுப்புக்கு பிறகே இந்தியர்கள் சாதி, மதம் என பிரிக்கப்பட்டோம் - ஆளுநர் ரவி..!

1

கோவை பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சார்பில் நொய்யல் பெருவிழா நடைபெறுகிறது. நொய்யல் பாதுகாப்பு, ஆரத்தி வழிபாடு, நீர் மேலாண்மை, ஆன்மீகம் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த விழாவை ஆளுநர் ஆர்.என் ரவி தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “ஆங்கிலேயர்கள் படையெடுப்புக்கு பிறகே இந்தியர்கள் சாதி, மதம் என பிரிக்கப்பட்டோம். அந்நியர்களே ஆரியன், திராவிடன் என பிரிவினையை ஏற்படுத்தினார்கள். அந்நியர்கள் படையெடுப்புக்கு பிறகே நாம் தனித்து விடப்பட்டோம். பிரிவினையை ஏற்படுத்தினர். தண்ணீரை அன்னையாக பாவித்து பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆங்கிலேயர்கள் நம் கலாச்சாரம், உயிர்த்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்தனர்” என்றார்.

Trending News

Latest News

You May Like