அது மிகவும் கடுமையான அனுபவம்.. கொரோனாவில் இருந்து குணமடைந்த நடிகை தமன்னா !

கொரோனா பரவல் ஏற்பட்டு ஏழு மாதங்களாகிவிட்டது. ஆனாலும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை. அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜுன், சுமலதா, இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.
அந்த வகையில், கடந்த வாரம் நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் ஷூட்டிங்கில் இருந்த அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து ஐதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தமன்னா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்.
தமன்னா தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, என்னுடைய குழுவும், நானும் படப்பிடிப்பு தளத்தில் சரியானமுறையில் இருந்தாலும் கடந்த வாரம் எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அதனையடுத்து, தேவையான சோதனையை மேற்கொள்ளும்போது எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
அதனையடுத்து, ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் நான் சேர்ந்தேன். மருத்துவ வல்லுநர்களின் சிகிச்சைக்குப் பிறகு நான் இப்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். அந்த வாரம் கடுமையான வாரமாக இருந்தது.
ஆனால், நான் நல்லமுறையில் இருந்தேன். தற்போது, சுயதனிமைப்படுத்தலில் இருந்து வருகிறேன். என் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றிகள். பாதுகாப்பாக இருங்கள். ஆரோக்கியமாக இருங்கள். இவ்வாறு தமன்னா தெரிவித்துள்ளார்.
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) October 5, 2020
newstm.in