1. Home
  2. தமிழ்நாடு

இது திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை : சவுக்கு சங்கர் தாக்கப்பட்டார்... விசாரணை நடத்த இ.பி.எஸ் வலியுறுத்தல்..!!

1

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

சமூக ஊடக பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ஒரு சில சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டி கைதுசெய்துள்ளது காவல்துறை. அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை சந்தித்தப்பின் அளித்த பேட்டியில், சவுக்கு சங்கர் சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நல்ல நிலையில் சிறைக்கு சென்றார்.

இந்நிலையில் கோவை சிறையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் எனவே மாண்புமிகு நீதிபதி ஒருவரை நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டி மனு அளித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் விடியா திமுக அரசில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

மேலும், பெண்களை இழிவாகப் பேசிய, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட பல திமுகவினர் மீது இந்த விடியா அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். சட்ட நடவடிக்கைகளும் நீதியும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.

சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பது என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகிவிடும்.

எனவே கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என இ.பி.எஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் அளித்த பேட்டியில்,  “தமிழகம் போலீஸ் ஸ்டேட் ஆக மாறிக்கொண்டிருக்கிறது. போலீஸ் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது.. அன்னைக்கு கையெழுத்து போட்ட சவுக்கு சங்கர் இன்னைக்கு விரல் ரேகை வைத்தது ஏன்? அவரை அடித்திருக்கிறார்கள்... வலது கையை உடைத்திருக்கிறார்கள்... அவர் எதிர்க்காத அரசியல் வாதிகளே இல்லை… இது திட்டமிட்டே பழிவாங்கும் நடவடிக்கை… சவுக்கு  சங்கர் தாக்கப்படவில்லை என சிறைத்துறை விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. அவர் தாக்கப்படவில்லை என்றால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருக்கலாம். அல்லது மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கலாம். எக்ஸ்ரே எடுக்க கூட அனுமதிக்கவில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.

Trending News

Latest News

You May Like