மிஸ் இந்தியாவாக ஐ.டி., மாணவி த்ருவி பட்டேல் தேர்வு..!
உலகளாவிய மிஸ் இந்தியா-2024 அழகிகள் போட்டி நியூஜெர்ஸியில் நடந்தது. உலகம் முழுவதும் வாழும் இந்திய அழகிகள் பலர் பங்கேற்றனர். நியூயார்க்கில் உள்ள இந்தியன் திருவிழா கமிட்டியினர் இந்தப் போட்டியை நடத்தினர். இந்த அமைப்பினர் கடந்த 30 ஆண்டுகளாக இந்தப் போட்டியை நடத்தி வருகின்றனர்.
குஜராத்தை சேர்ந்த த்ருவி, அமெரிக்காவில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். தகவல் தொழில்நுட்ப படிப்பை மேற்கொண்டுள்ள அவர், அழகிகள் போட்டியில் வெற்றி பெற்றார். இதுகுறித்து த்ருவி கூறுகையில்; நான் வெற்றி பெற்றது மிகப் பெரிய ஆச்சரியமாகவும், பெரும் கிரீடம் கிடைத்திருப்தாகவும் உணர்கிறேன் ‘ பாலிவுட் நடிகையாக வேண்டும் என்பதே இலக்கு, மேலும் ஐ.நா., கலாசார மைய தூதராக வேண்டும் என்றும் சொல்கிறார் இவர்.
அமெரிக்காவின் ஸ்ரிநேம் என்ற பகுதியைச் சேர்ந்த லிசா அப்டோல் ஹக் 2வதாகவும், நெதர்லாந்தை சேர்ந்த மாளவியா ஷர்மா 3வதாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.