1. Home
  2. தமிழ்நாடு

'எம்புரான்' இயக்குநர் பிருத்விராஜுக்கு ஐ.டி.நோட்டீஸ்..!

Q

பிருத்விராஜ் இயக்கத்தில் அண்மையில் எம்புரான் படம் வெளியானது. பெரும் வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் 2ம் பாகமான இந்த படம் வசூலில் சாதனை படைத்தது. அதேநேரத்தில் சர்ச்சையிலும் சிக்கியது.
இதற்கு அந்த படத்தில் நடித்த மோகன்லால் வருத்தம் தெரிவிக்க, சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட சில காட்சிகளும் நீக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை இயக்கிய நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜூக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
எம்புரான் படத்துக்கு முன்னதாக கோல்ட், ஜனகண மன, கடுவா ஆகிய 3படங்களை பிருத்விராஜ் தயாரித்து இருந்தார். அந்த படங்களில் அவர் நடித்தும் இருந்தார். ஆனால் நடிகருக்கான ஊதியத்தை பெறாமல், இணை தயாரிப்பாளர் என்ற அடிப்படையில் ரூ.40 கோடி வரை சம்பளம் பெற்றார் என செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, பிருத்விராஜ் இயக்கிய கோல்ட், ஜனகண மன, கடுவா ஆகிய 3 படங்களின் வருமானம் தொடர்பான கணக்குகளை சமர்ப்பிக்குமாறு கேட்டு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீசில் ஏப்.29ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
கோகுலம் சிட் அண்டு பைனான்ஸ் குழுமத்தின் தலைவர் கோகுலம் கோபாலன் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள, கோகுலம் சிட் அண்டு பைனான்ஸ் குழுமத்தின் தலைமை அலுவலகம் மற்றும் சென்னை நீலாங்கரையில் உள்ள கோகுலம் கோபாலன் வீடு உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 05) அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோகுலம் சிட்பண்ட்ஸ் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 4ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Trending News

Latest News

You May Like