1. Home
  2. தமிழ்நாடு

ஐடி மேனேஜர்ஸ் இந்த வீடியோவை பார்த்துடாதீங்க..!

1

 புனே பகுதியில் வசித்து வரும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் வேலை விடுப்பு பெறுவதற்காக எவ்வாறு போலி விபத்து காயங்களை உருவாக்குவது குறித்த பயிற்சி வகுப்புகளை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.

அத்துடன் விடுப்பு முடிந்த பின்பு வேலைக்குத் திரும்பும் போது அந்த காயங்களை மீண்டும் எப்படி உருவாக்குவது எனவும் அந்த வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். அந்த வீடியோவிற்கு ஒரு நபர் “இதனை ஐடி நிறுவன ஊழியர்கள் மட்டுமே பார்த்து மகிழுங்கள், மேலாளர்கள் கண்களில் இது படக்கூடாது” என நகைச்சுவையாக கூறியுள்ளார். 

மற்றொருவர் “இதெல்லாம் வீணாகும் திறமையா..? இவ்வாறு தவறான தகவலை பரப்புவது சரியில்லை” என குற்றம் சாட்டியுள்ளார். இன்னொருவர் “என் எக்ஸ் கூட இவ்வளவு போலியாக இல்லை” எனக் கூறியுள்ளார். மேலும் இது போன்ற வீடியோக்கள் நகைச்சுவைக்கும் பொய்மைக்கும் இடையில் எல்லை மீறிய விவாதத்தை தூண்டி வருகிறது என்பதை நினைவூட்டும் வகையில் உள்ளது

Trending News

Latest News

You May Like