மதுபோதையில் கார் ஓட்டுவதே தவறு.. இதுல ஏற்காடு மலை ஏறினால்... என்ன ஆச்சு பாருங்க..!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஜெகதீசன். இவரது மகன் ராஜ்குமார் (28). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் குடிநீர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தன்னுடன் பணிபுரியும் பழனிசாமி மகன் விக்னேஷ் (21), ஆத்தூர் பகுதியை சேர்ந்த அருள்மணி (26) ஆகியோருடன் ஒரு காரில் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்தனர்.
காரை ராஜ்குமார் ஓட்டி வந்துள்ளார். ஏற்காட்டை சுற்றி பார்த்த அவர்கள், மதுபோதையில் சேர்வராயன் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் தாங்கள் தங்கிய விடுதி அறைக்கு திரும்பிய போது மலைப்பாதை கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது எதிரே, டாடா ஏசி வாகனம் வந்தது. இதனால் காரை ஓட்டிவந்த ராஜ்குமார், இடது புறமாக திருப்பினார்.
அப்போது நிலை தடுமாறி சாலையோர திட்டை இடித்துக்கொண்டு, 50 அடி பள்ளத்தில் உருண்டு கார் விழுந்தது. இதில் காரில் இருந்த விக்னேஷ் படுகாயமும் மற்ற இருவருக்கும் லேசான காயமும் ஏற்பட்டது. இதையடுத்து ராஜ்குமார், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், பள்ளத்தில் கிடந்த வாலிபர்கள், 3 பேரையும் கயிற்றின் உதவியுடன் மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மூவரும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமவனைக்கு அனுப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.