1. Home
  2. தமிழ்நாடு

கொரோனா சீன ஆய்வகத்தில் உருவானது உண்மைதான்.. வைரஸ் ஆராய்ச்சியாளர் ஆதாரத்துடன் புகார் !

கொரோனா சீன ஆய்வகத்தில் உருவானது உண்மைதான்.. வைரஸ் ஆராய்ச்சியாளர் ஆதாரத்துடன் புகார் !


சீனாவில் கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இன்று நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. 

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் கொரோனா வைரஸ் தொடர்பாக தொடர்ந்து சீனா மீது குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு சீனா பதில் கூற வேண்டும், இல்லையேனில் தக்க பாடம் புகுட்டப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

இந்நிலையில், சீனாவின் பரிசோதனைக் கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது உண்மைதான் என வைரஸ் ஆராய்ச்சியாளர் ஒருவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா சீன ஆய்வகத்தில் உருவானது உண்மைதான்.. வைரஸ் ஆராய்ச்சியாளர் ஆதாரத்துடன் புகார் !ஹாங்காங்கை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் லீ-மெங் யான் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலை சீன அரசு மறைக்கிறது.

சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.
சீனாவின் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் எப்படி வெளியே பரவியது? ஏன் இதை உருவாக்கினார்கள்? என்று என்னால் விளக்க முடியும்.

கொரோனாவின் ஜீனோம் தொடரானது மனிதர்களின் கைரேகை போன்று காணப்படுகிறது. இதன்மூலம் உண்மை என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என அதிரடியாக கூறியுள்ளார்.

கொரோனா சீன ஆய்வகத்தில் உருவானது உண்மைதான்.. வைரஸ் ஆராய்ச்சியாளர் ஆதாரத்துடன் புகார் !

என்னிடம் இருக்கும் மூலம் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர் லீ-மெங் யான் தெரிவித்துள்ளார். மேலும் சீன அதிகாரிகள் தன்னை மிரட்டியதால் தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாகவும் டாக்டர். லீ-மெங் யான் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 

இதனால் கொரோனா வைரஸ் பரவல் விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in 

Trending News

Latest News

You May Like