நீட் தேர்வுக்கே இரங்கல் சொல்லும் நேரம் இது- எம்.பி தயாநிதிமாறன்!!

சென்னை கோடம்பாக்கத்தில் நலதிட்ட உதவிகளை வழங்கிய பின் தி.மு.க எம்.பி தயாநிதிமாறன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறார். நகரத்தில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு படித்துக் கொள்ளலாம். ஆனால் கிராமத்தில் உள்ளவர்கள் ஆன்லைன் வகுப்பு படிக்க முடியாது. தங்களை தயார் செய்துகொள்ள முடியாது. இதில் மத்திய அரசுக்கு , தமிழ்நாடு அரசும் உடந்தையாக இருக்கிறது என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக அரசு வெறும் இரங்கல் மட்டும் தெரிவித்து வருகின்றனர். உயிர்களை இழந்தது போதும், இறந்தவர்களுக்கு இரங்கல் சொல்வதை விட நீட்டுக்கு இரங்கல் சொல்லும் நேரம் வந்துவிட்டது எனவும் அவர் கூறினார்.