1. Home
  2. தமிழ்நாடு

உயர்ந்த பதவியில் உள்ள மத்திய நிதி அமைச்சர் இது போல் பரப்புவது வருத்தமளிக்கிறது - சேகர்பாபு..!

1

 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில், அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள ராமர் கோயில் நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ராமருக்கு 200-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோயில்களில் இந்த நிகழ்ச்சிகள் நடத்துவதையும் போலீஸார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு மிரட்டி வருகின்றனர். தமிழக அரசின் இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழகத்தின் பல பகுதிகளில் ராமர் கோயில் நிகழ்ச்சிகளை ஒட்டி பஜனைகளுக்கு ஏற்பாடு செய்தல், ஏழை எளியோருக்கு உணவு வழங்குதல், இனிப்புகள் வழங்கி கொண்டாடவும், அயோத்தியில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை காண விரும்பும் மக்களும் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்பின்போது மின்தடை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூறியுள்ளனர். இவை அனைத்தும் இண்டியா கூட்டணிக் கட்சியான திமுகவின் இந்து விரோத முயற்சி என்றும் மற்றுமொரு பதிவில், நேரலை ஒளிபரப்பு தடையை நியாயப்படுத்த தமிழக அரசு அதிகாரப்பூர்வமற்ற முறையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கூறி வருவதாகவும், அயோத்தி தீர்ப்பு வெளிவந்த நாளில் பிரச்சனைகள் எதுவும் இல்லை தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் ஸ்ரீராமைக் கொண்டாட மைதானம் மற்றும் மக்கள் தாமாக முன்வந்து பங்கேற்பது இந்தி எதிர்ப்பு திமுகவை கொந்தளிக்க வைத்துள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.


இந்நிலையில் இது குறித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது எக்ஸ் தளத்தில், “சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது.தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்தகுறியது" என்று அவர் பதிவிட்டுள்ளார். 


 

Trending News

Latest News

You May Like