ஏடிஎம்-இல் இனி ரூ.10,000க்கு மேல் பணம் எடுக்க இது அவசியம்!

எஸ்பிஐ ஏடிஎம்மில் 10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
தேவையற்ற பணப்பரிவர்த்தனைகளை குறைப்பதற்காக எஸ்பிஐ புதிய பாதுகாப்பு முறையை கொண்டுவந்துள்ளது. அதன்படி, 10 ஆயிரத்துக்கு மேல் பணத்தை ஏடிஎம்-இல் இருந்து எடுக்க வேண்டும் என்றால் ஓடிபி (OTP) கொடுத்து பணம் பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதாவது 10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்கிறீர்கள் என்றால், வாடிக்கையாளர் வங்கியில் பதிவு செய்த தொலைபேசி எண்ணிக்கு ஓடிபி அனுப்பப்படும். அதனை ஏடிஎம் மெஷினில் உள்ளீடு செய்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இதுவே எஸ்பிஐ கார்டு கொண்டு வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் ஓடிபி தர வேண்டிய அவசியமில்லை. எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மட்டும் இந்த முறை அமல்படுத்தப்பட இருக்கிறது.
இதன் மூலம் தேவையற்ற பணப்பரிவர்த்தனைகளை தடுக்க முடியும் என்றும், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு எனவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
newstm.in