1. Home
  2. தமிழ்நாடு

அரசியல் ஆசாபாசங்களை வைத்து அவரை சித்தரிப்பது சரியல்ல - காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் பேட்டி

அரசியல் ஆசாபாசங்களை வைத்து அவரை சித்தரிப்பது சரியல்ல - காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் பேட்டி


முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க உள்ளார். இதற்கு, சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், முத்தையா முரளிதரன் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர். சர்வதேச அளவில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய பெருமையும் அவரை சாரும்.

அதனால், அவரைப் பற்றி திரைப்படம் எடுப்பதில் என்னை பொருத்தவரையிலும் எந்த தவறும் இல்லை, அரசியல் ஆசாபாசங்களை வைத்து அவரை சித்தரிப்பது சரியான அனுகுமுறை அல்ல. முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தை எடுப்பதும், அதில் நடிப்பதும் தவறில்லை என குறிப்பிட்டார்.

newstm.in

Trending News

Latest News

You May Like