1. Home
  2. தமிழ்நாடு

பள்ளியில் மாணவன் தொடர்ந்து படிப்பது சாத்தியமற்றது.. நாங்குநேரி சம்பவம் தொடர்பாக முதல்கட்ட அறிக்கை தாக்கல்..!

1

 நாங்குநேரியில் வீடு புகுந்து சக மாணவர்களால் ஆயுதம் கொண்டு தாக்கி படுகாயம் ஏற்படுத்தப்பட்ட பள்ளி மாணவன் மற்றும் அவரது சகோதரி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பள்ளி மணவரும், அவரது தங்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களுக்கு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து 40 நாட்கள் ஓய்வில் இருக்க பரிந்துரை செய்துள்ளனர்.

Nanguneri

தமிழ்நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து நெல்லை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையை பள்ளிக்கல்வி இயக்குனரிடம் தாக்கல் செய்துள்ளார்.

அரிவாள் வெட்டால் பாதிக்கப்பட்ட மாணவர் தொடர்ந்து இதே பள்ளியில் படிப்பது சாத்தியமற்றது எனவும் விடுதியுடன் கூடிய வேறு பள்ளியில் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கவும் அவ்வறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Nanguneri

இதுகுறித்து அவர் தாக்கல் செய்த முதற்கட்ட விசாரணை அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் ஜாதிய ஆதிக்கம் மனோபாவம் கொண்ட மாணவர்களால் வீட்டிற்குள் புகுந்து கொடூரமாக வெட்டப்பட்ட விவகாரத்தில் துறை ரீதியிலான முதற்கட்டமான விசாரணை மேற்கொண்டு அறிக்கையை பள்ளிக்கல்வித்துறையிடம் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு தாக்கல் செய்தார்.

பள்ளியில் மாணவருக்கு நடைபெற்ற சாதிய கொடுமைகள் குறித்து விரிவான தகவல்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. மேலும் அவர்களை விடுதியுடன் கூடிய வேறு பள்ளியில் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like