பாஜகவை ஈஸியா தோற்கடிச்சுடலாம்... ப.சி. சொல்லும் சிதம்பர ரகசியம்!
மத்தியில் ஆளும் பாஜக அரசை தோற்கடிப்பது மிகவும் எளிது ஆனால், அதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரு அணியில் இணைந்து செயல்பட வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அங்கு முதற்கட்டத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. நாளை இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில். கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தல் என அனைத்திலுமே பாஜகவின் வாக்கு வங்கி குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு என்ன அர்த்தம். மக்கள் பாஜகவை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று தானே அர்த்தம்.
பீகாரில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி அமைத்துள்ளன. இதுபோலவே, ஒவ்வொரு மாநிலத்திலும் மெகா கூட்டணி அமைத்தால் பாஜகவை எளிதில் வென்று விடலாம் என அந்த ரகசியத்தை உடைத்தார்.