யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த ஐ.டி.,பட்டதாரி பெண் கைது..!
மும்பை போக்குவரத்து போலீசாருக்கு மிரட்டல் செய்தி ஒன்று வந்தது. அதில், '' உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் 10 நாட்களில் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால், மஹா., முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் போன்று கொலை செய்யப்படுவார்'' எனக்கூறப்பட்டு இருந்தது.
இதனையடுத்து மிரட்டல் விடுத்த எண்ணை வைத்து போலீசார் விசாரணையை துவக்கினர். அதில், இந்த மிரட்டலை விடுத்தது தானேயை சேர்ந்த பாத்திமா கான் என்ற பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையை தொடர்ந்து அவரை மும்பை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், 24 வயதான அந்த பெண் பி.எஸ்.சி., (ஐ.டி.,) படிப்பு முடித்துள்ளார். குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தந்தை மரவேலை தொடர்பான தொழிலில் ஈடுபட்டு உள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.