1. Home
  2. தமிழ்நாடு

ஐ.டி. நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு !!

ஐ.டி. நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு !!


இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் அம்மாநில அரசுகள் ஊரடங்கை தளர்வு செய்து கொள்ளலாம் எனவும் , ஐ.டி நிறுவனங்கள் 50 சதவிகிதம் ஊழியர்களை வைத்து பணியாற்றலாம் எனவும் கூறியிருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தினமும் அதிகமாகி கொண்டே வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் உதயகுமார் ; தமிழக அரசு மே 3 வரை ஊரடங்கை கடைப்பிடிக்க முடிவு செய்து அறிவித்துள்ளது.

எனவே, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், மே, 3 வரை, ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள், வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையை கடைப்பிடிக்க வேண்டும். தகவல் தொழில் நுட்பத் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள சரிவை அதன் பின் மீட்டெடுத்திட முடியும்.

நோயின் அறிகுறி இல்லாமல் 80 சதவீதம் பேருக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. எனவே மக்களின் பாதுகாப்பு தான் தற்போது பெரிதாக மதிக்கப்படுகிறது. மே, 3 வரை, ஊரடங்கை தொடர்ந்து கடைப்பிடிக்கவும் என இவ்வாறு அவர் பேசினார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like