இளம்பெண்ணுக்கு அந்தரங்க வீடியோவை அனுப்பி சிக்கிய ஐடி ஊழியர்.. பணத்தை இழந்த கொடுமை !
சென்னை தியாகராய நகர் பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தியாகராய நகர் காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் பிரிவுக்கு அளித்த புகார் போலீசாரையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த புகாரில், ''தான் ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக அந்த இளைஞர் குறிப்பிட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் தனது பேஸ்புக் ஐடிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் நட்பழைப்பு கொடுத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகே அவரது நட்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
பின்னர் பிலிப்பைன்ஸ் பெண் மற்றும் சென்னை இளைஞர் நாள்தோறும் பேச ஆரம்பித்தனர். பேச பேச நட்பு வளர்ந்ததோ இல்லையோ.. இருவருக்கும் இடையே காதல் வளர்ந்தது.
இந்த காதல் அவர்களுக்குள்ளான பேச்சு மாறியது. அதையும் தாண்டி அப்பெண் கேட்கும் போதெல்லாம் தனது அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்களை இளைஞர் அனுப்பிவைத்துள்ளார்.
பல முறை இப்படி புகைப்படம், வீடியோக்களை அனுப்பிய இளைஞருக்கு அப்பெண் திடீரென ஒரு குண்டுபோட்டுள்ளார். அதாவது எனக்கு இப்போது 2 லட்ச ரூபாய் பணம் வேண்டும். இல்லையென்றால், ''நீ எனக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோ மற்றும் போட்டோ என அனைத்தையும் உனது நண்பனுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர் பிலிப்பைன்ஸ் பெண் கேட்ட 2 லட்சம் ரூபாயையும் அனுப்பிவைத்தார். ஆனால் அதன் பின்னர் மேலும் 5 லட்சம் ரூபாய் கேட்டு அப்பெண் மிரட்டியுள்ளார்.
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த இளைஞர் இனியும் தாமதிக்கக்கூடாது என பட்டபின்னரே தி.நகர் துணை ஆணையர் சைபர் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
newstm.in