1. Home
  2. தமிழ்நாடு

இந்த தண்ணீர் டேங்க் வைக்க ரூ. 7.70 லட்சம் செலவா ? - அதிமுக எம்எல்ஏ பிரமாண்ட திட்டம் !

இந்த தண்ணீர் டேங்க் வைக்க ரூ. 7.70 லட்சம் செலவா ? - அதிமுக எம்எல்ஏ பிரமாண்ட திட்டம் !


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இதனால் தொகுதி மக்களிடம் நல்லபெயரை எடுக்க எம்எல்ஏக்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அதேநேரத்தில் பலர் திட்டம் என்ற பெயரில் கொள்ளையடித்தும் வருகின்றனர்.

திருப்பூர் 50வது வார்டு ஈஸ்வரமூர்த்தி லே அவுட் பகுதியில் மாநகராட்சி சார்பில் பழைய கைப்பிடி பம்ப் ல் நீர்மூழ்கி மோட்டார் பொருத்தப்பட்டு 4 இடங்களில் குழாய் பொருத்தி மோட்டார் திட்டு அமைக்கப்பட்டதுடன். டேங்க் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திட்ட மதிப்பீடு 7.70 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் பணிகள் குறித்து குறிப்பிடாமல் டேங்க் மீது செலவு என 7.70 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை படமெடுத்த சிலர் சமூக வலைதளங்களில் ஒரு டேங்க் அமைக்க இவ்வளவு செலவா என கிண்டல் செய்து பதிவிட்டனர். இது தொடர்பாக தகவலறிந்த எம்.எல்.ஏ குணசேகரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மாநகராட்சி நிதியில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தை எம்.எல்.ஏ என்ற முறையில் திறந்து வைத்ததாகவும் அங்கு செய்யப்பட்ட மொத்த பணிகளின் செலவு தான் 7.70 லட்சம் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

எனினும் அதிமுக எம்எல்ஏ அவர்களால் ரூபாய் 7.7 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மிகபிரம்மாண்ட தண்ணீர் தொட்டி என பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like