சாமியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரம்..!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் நாளுக்கு நாள் சாதுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனிடையே கிரிவலப்பாதையில் போலி சாமியார்கள் நடமாட்டம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து சாதுக்களுக்கு கியூஆர் கோடுடன் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியில் மாவட்ட காவல்துறை ஈடுபட்டுள்ளது.
சுமார் 300-க்கும் மேற்பட்ட சாமியார்கள் காவல்துறையினரிடம் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். அவ்வாறு அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் கூறுவது சரியாக உள்ளதா என விசாரணை செய்து சரியான விவரங்கள் கொடுத்த சாமியார்களுக்கு புகைப்படங்களுடன் கூடிய அடையாள அட்டைகளை காவல்துறையினர் வழங்கி வருகின்றனர்.