1. Home
  2. தமிழ்நாடு

இஸ்ரோ வரலாற்றில் இன்னொரு சாதனை!வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது PSLV C-60..!

Q

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இன்று (டிச.30) இரவு 9.58 மணிக்கு பதிலாக, இரவு 10 மணி 15 வினாடிகளுக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்த நிலையில், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

 

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வி்ண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.

 

ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணிநேர கவுண்டவுன் ஞாயிறு இரவு ஆரம்பித்த நிலையில், இன்று, திங்கட்கிழமை ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட், ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்பட உள்ள ஆய்வுக் கருவிகளையும் தாங்கிச் செல்வது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெடெக்ஸ் திட்டத்தின் கீழ் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-60 (PSLV C-60) ராக்கெட்டில் மொத்தம் 24 ஆய்வுக் கருவிகள் உள்ளன. போயம்-4 எனப்படும் ராக்கெட்டின் 4வது நிலையில் ஆய்வுக் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.

பிற நிறுவனங்களுடன் இணைந்து ஸ்பெடெக்ஸ் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் 14 ஆய்வுக் கருவிகளை இஸ்ரோ தயாரித்தவை. சில கல்வி நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் எஞ்சிய 10 கருவிகளை உருவாக்கியுள்ளன என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ரோபோடிக், செயற்கை நுண்ணறிவு, பயோ டெக்னாலஜி உள்ளிட்ட பல துறைகளில் விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்வதற்கான கருவிகள் பிஎஸ்எல்வி சி-60 (PSLV C-60) ராக்கெட்டில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, விண்வெளியின் தாவரங்களை வளர்ப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. மொபைல் நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் பயன்படக்கூடிய கருவிகளும் இத்திட்டத்தில் உள்ளன.

Trending News

Latest News

You May Like