1. Home
  2. தமிழ்நாடு

இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு அப்துல் கலாம் விருது - முதலமைச்சர் கவுரவம்..!

1

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். பல்வேறு புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். 

குறிப்பாக அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவா்களுக்கு வழங்கப்படும் டாக்டா் அப்துல் கலாம் விருதினை தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநருமான வீரமுத்துவேலுவுக்கு வழங்கினார்.

சந்திரயான் 3: விண்வெளி துறையில் இந்தியாவுக்கு என தனிப் பெயரை உருவாக்கி கொடுத்தது சந்திரயான் 3 திட்டம்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதியன்று நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. சந்திரயான் -3 விண்கலன் பூமியை 6 முறை சுற்றி 41 நாட்கள் பயணத்திற்கு பின்னர் நிலவின் தென் துருவத்தில் இறங்கி வரலாற்று சாதனையை படைத்தது. இதுவரை உலகின் எந்த ஒரு நாடும் நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கியது கிடையாது. 

சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு 'ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார்' விருதை அறிவித்திருக்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

தொடர்ந்து, மாநில அரசு அப்துல் கலாம் விருதை சந்திரயான் 3 வெற்றிக்கு காரணமான விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு வழங்கி கவுரவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like