மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ..! முதல் கட்ட சோதனையில் வெற்றி..!
விண்வெளி அறிவியலில் அடுத்தகட்டமாக பார்க்கப்படுவது மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் (ISRO Trying to Send Man into Space) தான். இது கனவாக மட்டுமே உள்ள நிலையில் தான் தற்போது இதனை மெய்யாக்கும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது. இதற்காக ககன்யான் என்னும் திட்டத்தை இஸ்ரோ தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் இஸ்ரோ தரை பகுதியில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மனிதர்களை ஏந்திச் செல்லும் ராக்கெட்டுகளின் என்ஜின் பரிசோதனை நடைபெற்றது. இந்த சோதனையானது தற்போது வெற்றிகரமாக முடித்திருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
பல வருடங்களாக இந்தியா சொந்தமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப (Humans into Space) வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக தொடங்கப்பட்ட திட்டம் தான் இந்த ககன்யான் திட்டம். இதற்கு முன் இந்தியா சார்பில் ராகேஷ் சர்மா 40 ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணில் பறந்தார். ஆனால் அவரை சோவியத் ரஷ்யா பறக்க வைத்தது.
இதன் காரணமாக தான் தற்போது இந்தியா எந்த நாடுகளின் உதவியும் இன்றி தங்களது வீரர்களை விண்ணில் பறக்க வைக்க (Send Man into Space) முடிவெடுத்துள்ளது. இதற்காக தான் இந்த ககன்யான் திட்டம் தொடங்கப்பட்டது. மேலும் இந்த திட்டமானது வரும் 2025-ம் ஆண்டு செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது இந்த திட்டத்தின் முதற்கட்ட சோதனைகள் வெற்றி பெற்றிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்த முதல் கட்ட சோதனையில் இந்த ககன்யான் (Gaganyaan) திட்டத்தில் மனிதர்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களையும் கொண்டு செல்ல வேண்டியுள்ளது இதன் காரணமாக தான் இஸ்ரோ LVM3 என்ற ராக்கெட்டை தேர்ந்தெடுத்திருக்கிறது. இதன் மூலம் சுமார் 8 டன் எடை கொண்ட பொருட்களை பூமியில் இருந்து 200 கி.மீ உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும். சந்திரயான் 3 மிஷனில் இந்த ராக்கெட்தான் பயன்படுத்தப்பட்டது.
இந்த வகையில் தான் இந்த ராக்கெட்டில் உந்தி தள்ளும் CE20 கிரையோஜெனிக் என்ஜினை இஸ்ரோ வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. மேலும் இந்த பரிசோதனை வெற்றியடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது இந்திய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.