காசாவில் தாக்குதலை தொடர்வோம் - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்..!
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் ஒரு வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இதனால் இஸ்ரேலை சேர்ந்த 1,208 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 251 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினர் பிடித்துச் சென்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலர் உயிரிழந்த நிலையில், இன்னும் 100 பேருக்கும் மேல் பிணைக்கைதிகளாக ஹமாஸ் வசம் உள்ளனர்.
இந்நிலையில், நிருபர்கள் சந்திப்பில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: நாங்கள் இப்போது போரை நிறுத்தினால் ஹமாஸ் மீண்டும் வந்து தாக்கலாம். இது நடப்பதை நாங்கள் விரும்பவில்லை. போரை இப்போது நிறுத்த முடியாது. காசாவில் தாக்குதலை தொடர்வோம். ஹமாஸ்-ஐ அழித்தொழித்தல் மற்றும் அதன் ராணுவ மற்றும் நிர்வாகத் திறன்களை ஒழித்தல் என்ற இலக்கை நிர்ணயித்து உள்ளோம்.
இந்த இலக்கை நாங்கள் இன்னும் முழுமையாக அடையவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகள் நடைபெற்றும் வரும் நிலையில், போரை நிறுத்த மாட்டேன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.