1. Home
  2. தமிழ்நாடு

இது அல்லவா காதல் : மனைவியை பிரிய மனமின்றி தினமும் 8 மணி நேர பயணம் செய்யும் கணவர்..!

1

சீனா வெய்பாங் நகரை சேர்ந்தவர் லின்ஷூ . 31 வயதான இவர் கடந்த 7 ஆண்டுகளாக ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்த ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. லின்னின் மனைவியின் சொந்த ஊர் வெய்பாங்.

அங்கு வசித்து வரும் லின்ஷூ ஷான்டாங் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கிங்டாவோ நகரில் உள்ள அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். தனது வீட்டில் இருந்து அவர் வேலை பார்க்கும் அலுவலகம் சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் அலுவலக பகுதியில் தங்கினால் மனைவியை பிரிய வேண்டும் என்பதால் அதற்கு அவர் உடன்படவில்லை.

இதனால் தினமும் வீட்டில் இருந்து அதிகாலை 5 மணிக்கு எழுந்து கொள்ளும் லின்ஷூ 5.20 மணிக்கு வீட்டில் இருந்து புறப்படுகிறார். பின்னர் ரெயிலை பிடிப்பதற்காக 30 நிமிடங்கள் மின்சார பைக்கில் செல்லும் இவர், ரெயில் மூலம் கிங்டாவோ நகருக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து 15 நிமிடங்கள் சுரங்க பாதை வழியாக நடந்து அலுவலகத்துக்கு செல்கிறார்.

காலை 9 மணிக்கு வேலையை தொடங்கும் லின்ஷூ, பணி முடிந்த பிறகு மீண்டும் 4 மணிநேரம் பயணம் செய்து தனது வீட்டை அடைவார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மனைவியை பிரிய மனமின்றி லின்ஷூ தினமும் சுமார் 8 மணி நேரம் பயணித்து அலுவலகம் சென்று வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like