இதற்கு ஒரு எண்டே இல்லையா..? இன்றைய தங்கம் விலை நிலவரம்..!

ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கிவிடமாட்டோமா என்பதுதான் குறைந்த வருவாய் பிரிவினரின் நோக்கம். ஆனால் ராக்கெட் வேகத்தைவிட நாள்தோறும் புதிய உச்சம் தொட்டு வருகிறது தங்கத்தின் விலை.
ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல் 1) சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,510-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு ரூ.68 ஆயிரத்தை கடந்தது.
தொடர்ந்து இன்று ஏப்ரல் 2ஆம் தேதி நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, ஒரு கிராம் ரூ.8,510-க்கும், ஒரு சவரன் ரூ.68,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி கிராம் ஒன்றுக்கு ரூ.114-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.