1. Home
  2. தமிழ்நாடு

இதற்கு ஒரு எண்டே இல்லையா ? கடந்த 7 நாள்களில் மட்டும் ரூ.2,200 உயர்வு..!

1

கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயா்ந்து ரூ.6,015-க்கும், பவுனுக்கு ரூ.680 உயா்ந்து ரூ. 48,120-க்கும் விற்பனையாகி வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியது தங்கம். இந்த நிலையில், மீண்டும் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயா்ந்து ரூ.6,040-க்கும், பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ. 48,320-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், வியாழக்கிழமை (நேற்று) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயா்ந்து ரூ.6,090-க்கும், பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ. 48,720-க்கும் விற்பனையானது. தொடர் விலை உயர்வால் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியள்ளது தங்கம்.

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை கடந்த ஜன.22 முதல் மத்திய அரசு 14.35 சதவீதம் அளவுக்கு உயா்த்தியது. மேலும், பணவீக்கம், அமெரிக்காவில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது, அங்கு வட்டிவீதம் குறைக்கப்படாதது. சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கிக் குவிப்பது போன்றவற்றால்தான் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து என்று பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

இதன்மூலம் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்பதுடன், மேலும் உயரவே வாய்ப்புள்ளதாகவும், அடுத்த சில நாள்களில் பவுன் ரூ. 50,000-ஐ தாண்டும் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.50 காசுகள் உயர்ந்து ரூ.78.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 உயா்ந்து ரூ.78,500-க்கும் விற்பனையானது. 

ஆபரணத் தங்கம் விலை கடந்து வந்த பாதை (ஒரு பவுன் விலை) 2000 ம் ஆண்டு - ரூ. 3,480, 2005 ம் ஆண்டு - ரூ. 4,640, 2010 ம் ஆண்டு - ரூ. 15,448, 2015ம் ஆண்டு - ரூ. 18,952, 2020ம் ஆண்டு  - ரூ. 37,792, 2021ம் ஆண்டு  - ரூ. 36,152, 2022ம் ஆண்டு  - ரூ. 41,040, 2023ம் ஆண்டு  (டிச.31) - ரூ. 47,280, 2024ம் ஆண்டு  (மார்ச் 5) - ரூ. 48,120, 2024ம் ஆண்டு  (மார்ச் 7) ரூ.48,720.

Trending News

Latest News

You May Like