1. Home
  2. தமிழ்நாடு

ஏ.சி கூலாக இல்லையா? என்ன செய்வது?

Q

ஏ.சி கூலாக இல்லை என்றால் உடனே சர்வீஸ் ஆட்களை அழைத்து மெஷினில் கேஸ் போதுமான அளவோடு உள்ளதா என்று தெரிந்து கொண்டு இல்லை என்றால் நிரப்ப சொல்ல வேண்டும். எவாபிரேட்டர் காயில், கண்டென்சர் காயில், அதில் உள்ள ஃபேன் இவைகள் முக்கியம். இந்த மூன்றும் சரியாக வேலை செய்தால்தான் மின்சாரம் வீணாகாமல் இருக்கும். அதனால் இந்த பாகங்கள் சுத்தமாக வேலை செய்கின்றதா என்பதை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

கோடையில் வீட்டு ஜன்னல்களுக்கு கரும்பச்சை, கருநீல வண்ணத் திரைச்சீலைகளை பயன்படுத்தினால் உஷ்ணம் உள்ளே வராது.

பழைய ஷேவிங் பிரஷ்ஷால் குழந்தைகளின் ஷூவிற்கு பாலிஷ் போடலாம்.

வேஸ்ட் ஆன ஸ்பான்ச் துண்டுகளை பூச்செடிகளை சுற்றி போட்டு விட்டால் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும்.

ஃபிரிட்ஜில் வாசனை மிக்க பொருட்களை வைத்தால் அதன் அருகே இரண்டு ரொட்டித் துண்டை வைத்துவிட அது வாசனையை தன்னுள் ஈர்த்துக் கொள்ளும்.

லோ வோல்டேஜில் மிக்ஸியில் அரைக்கக் கூடாது. அதேபோல் சூடான பொருளையும் அதில் அரைக்க வேண்டாம். மிக்ஸி ஓடும் பொழுது சூடு வருவதாக இருந்தால் இடைவெளி விட்டு அரைப்பது அவசியம்.

மின்விசிறிகளை ஈரத்துணியால் அடிக்கடி துடைத்து விட்டு அவ்வப்பொழுது எண்ணெய் போட்டால் நீண்ட நாள் உழைக்கும்.

கேஸ் லைட்டரின் தீப்பொரி வரும் இடத்தை மெல்லிய துணியால் சுத்தம் செய்வதுடன் தண்ணீர் படாத இடத்தில் அதை வைத்தால் அழுக்கு சேராமல் இருக்கும்.

வாகனத்தை பழுது பார்க்கும் டூல்கிட்டில் ஒரு கையுறையை வைத்திருந்து பயன்படுத்தினால் கைகள் அழுக்காகாது.

பல்புகளை தண்ணீரில் கழுவாமல் ஈரத் துணியால் அதன் கண்ணாடி பகுதியை மட்டும் துடைத்து அழுக்கைப் போக்கவும். உலோகப் பகுதியில் ஈரம் பட்டால் பியூஸ் போன பல்பாகிவிடும்.

வெளியூருக்கு செல்லும் பொழுது தவறாமல் மறக்காமல் குக்கர் வெயிட்களை ஒரு பாத்திரத்தில் அல்லது ஒரு டப்பாவில் போட்டு நன்றாக மூடி வைத்து விட்டு சென்றால் அதற்குள் புழு பூச்சிகள் அடையாமல் இருக்கும். அதேபோல் அவற்றை சமைக்கும் பொழுது நன்றாகத் தட்டி விட்டு கழுவிய பிறகு சமைப்பது உத்தமம்.

மிக்ஸி ஜார்களில் எண்ணெய் தேய்த்து வைத்து விட்டு சென்றால் பழுதாகாமல் இருக்கும். திரும்ப வந்து மிக்ஸியை ஓட விடும்போது ஜார் இறுகி கடினமாகாமல் வைத்தவுடன் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.

பித்தளை, வெண்கலம் ,செம்பு பாத்திரங்களை எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து தேய்த்தால் பளிச்சென்று ஆகிவிடும். ஆனால் சிறிது நேரத்தில் கறுத்தும் விடும். அதற்கு இவற்றுடன் சிறிதளவு சாம்பல் கலந்து தேய்த்தால் நீண்ட நாட்கள் பளபளப்பு மாறாமல் இருக்கும்.

Trending News

Latest News

You May Like