1. Home
  2. தமிழ்நாடு

ஹிஜாப் பிரச்னைக்கு இடையே சாதித்த இஸ்லாமிய மாணவி!!

ஹிஜாப் பிரச்னைக்கு இடையே சாதித்த இஸ்லாமிய மாணவி!!


ஹிஜாப் பிரச்னையிலும் படிப்பில் கவனம் செலுத்தி தேர்வு எழுதிய இஸ்லாமிய மாநிலத்தில் 2ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி மே 18 வரை நடைபெற்றது. சுமார் 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ - மாணவியர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

ஆனால் ஹிஜாப் பிரச்னை உள்ளிட்ட முக்கிய காரணங்களினால், தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுத வரவில்லை. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து, மதிப்பெண் சரிபார்ப்பு பணியும் முடிந்து விட்டது.

இந்நிலையில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பி.யு., போர்டு அலுவலகத்தில் கடந்த 17ஆம் தேதி காலை 11:00 மணிக்கு, தொடக்க கல்வி துறை அமைச்சர் நாகேஷ், தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

ஹிஜாப் பிரச்னைக்கு இடையே சாதித்த இஸ்லாமிய மாணவி!!

இந்நிலையில், ஹிஜாப் பிரச்னையிலும் கல்வியில் கவனம் செலுத்தி தேர்வு எழுதிய இஸ்லாமிய மாணவி இல்ஹாம் 600க்கும் 597 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இஸ்லாமிய மாணவிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இது கடினமான நேரம், ஆனாலும் எனது நோக்கம் தெளிவாக இருந்தது, கவனம் படிப்பில் இருந்தது. என்னைப் போல பல மாணவிகள் தேர்வு எழுதியிருந்தால் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கமுடியும் என அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like