1. Home
  2. தமிழ்நாடு

யூடியூபர் இர்ஃபான் செய்வது சரியா? இர்ஃபான் மீது நெட்டிசன்கள் தாக்கு..!

W

யூடியூபர் இர்ஃபான் விதவிதமான உணவுகளை சாப்பிட்டு அதை வீடியோவாக வெளியிட்டு பிரபலம் அடைந்தார். கையேந்தி பவன முதல் நட்சத்திர உணவகங்கள் வரை இர்ஃபான் சுவைக்காத உணவகங்களே கிடையாது. மக்களுக்கு பிடித்த வரவேற்பு பெற்ற உணவகத்தை தேடி பிடித்து சுவைபட பேசி அந்த உணவகம் குறித்து வீடியோ பதிடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார். பின்னாளில் சினிமா செலிபிரிட்டிகளை இண்டர்வியூ எடுக்க ஆரம்பித்தார். தற்போது அவரும் ஒரு செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார். இதனால், அவரை சுற்றி சர்ச்சைகளும் அதிகம் இடம்பெறுகின்றன. இவர் எதை செய்தாலும் வீடியோ எடுத்து அதை பதிடுவார். ஒருவருக்கு செய்யும் உதவியை கூடவா வீடியோவாக எடுத்து வெளியிடுவீர்கள் பலரும் கிண்டல் அடித்துள்ளனர்.
பாலினம் குறித்த அறிவித்த சர்ச்சை அடங்குவதற்குள் தனக்கு பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்தது பெரும் குற்றமாக பார்க்கப்பட்டது. இதற்கு மருத்துவர்களும் கொந்தளித்தனர். இர்ஃபான் எதை செய்தாலும் வீடியோவோடு வெளியிட்டு மக்களுக்கு வெளிக்காட்டுவார். ஆனால், தனது குழந்தையின் தொப்புள் கொடியை அறுப்பது தவறு என்று தெரிந்தே செய்திருக்கிறார் என சர்ச்சைகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவத் துறை சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது. பின்னர், தனியார் மருத்துவமனைக்கும் இர்ஃபானுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இர்ஃபான் கைது செய்யப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், இதில் இருந்து தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
இந்நிலையி்ல், ரம்ஜான் தினமான  நேற்று இர்ஃபான் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று இல்லாதவர்களுக்கு உணவை வழங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒருவர் உணவை பறித்து வாங்கியதாக தெரிகிறது. இதற்கு இர்ஃபான் அசிங்கமாக இல்லையா... இப்படியா வாங்குவீங்க கொஞ்சம் கூட கூச்சமே இல்லை என திட்டுகிறார். இதையும் தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ காட்டூத்தீ போல் பரவி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இர்ஃபானை கடுமயைான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர். "காருக்குள்ள உக்காந்து குடுத்தா கிடைக்குமோ கிடைக்காதோ ன்னு முண்டியடிச்சி வரத்தான செய்வாங்க... அதுக்கென்னமோ கொள்ள காரங்க கிட்ட இருந்து தப்பிச்சு வந்த மாதிரி பிஜிஎம் அப்புறம் நக்கல்னு... இது ஒரு கன்டென்ட்.. திருந்தவே மாட்டானா இவன்லாம்" என மிக மோசமாக வசைபாடுகின்றனர்.

காருக்கு உள்ள உக்காந்து குடுத்தா கிடைக்குமோ கிடைக்காதோ ன்னு முண்டியடிச்சி வரத்தான செய்வாங்க… அதுக்கென்னமோ கொள்ள காரங்க...

Posted by MooknayakDr on Monday 31 March 2025

Trending News

Latest News

You May Like