1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் மக்களாட்சியா? ஆளுநர் ஆட்சியா? கொந்தளித்த ராமதாஸ்!

தமிழகத்தில் மக்களாட்சியா? ஆளுநர் ஆட்சியா? கொந்தளித்த ராமதாஸ்!


சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுநரால் தடுக்கமுடியும் என்றால், தமிழகத்தில் நடைபெறுவது மக்களாட்சியா ? அல்லது ஆளுநர் ஆட்சியா ? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநர் பன்வாரில் புரோஹித்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், இது குறித்து அவர் எந்த முடிவும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார்.

இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சட்டப்பேரவை அனுப்பும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கலாம் அல்லது திருப்பி அனுப்பாமல் வைத்திருக்கலாம் என்ற ஒரு அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு, கிராமப்புறத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நோக்குடன் ஆளுநர் முட்டுக்கட்டை போடுவது சரியான நடைமுறை என காட்டமாக பதிவிட்டுள்ளார்.மேலும், பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் தடுக்க முடியும் என்றால், மக்களாட்சிக்கு என்ன மரியாதை என்றும், இந்த விவகாரத்தில் உடனடியாக விடை காணவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை நியாயமானது என்றாலும், இது தொடர்பாக அவர் ஏற்கனவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்றும் நிஜமான உண்மையே. இருப்பினும், அவர் தற்போது விடுத்துள்ள ட்வீட் கொஞ்சம் அரசியல் காரம் மிகுந்தது என்றும், பாஜக கூட்டணியில் பாமக உள்ள நிலையில், சட்டப்பேரவை தேர்தலை மனதில் கொண்டே அண்மைக் காலமாக பாமக சில முடிவுகளை எடுத்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.பாமகவின் இந்த அதிரடி நடவடிக்கைகளை எல்லாம் பார்க்கும் போது, சட்டப்பேரவை தேர்தலின் போது, அதிமுக -பாஜக தலைமையிலான கூட்டணியில் நீடிக்குமா என்பது சந்தேகமே என்றும் ஆருடம் கூறுகின்றனர்.

Trending News

Latest News

You May Like