கன்னியாகுமரியில் போட்டியிடுகிறாரா விஜய் வசந்த்!?

ஹெச்.வசந்தகுமார் உயிரிழந்ததால் காலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதியில் அவரது மகன் விஜய் வசந்த் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கன்னியாகுமரியில் வெற்றி பெறுவதற்கு முன்பே வசந்தகுமார் அங்குள்ள மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார். மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்டங்களை செய்து கொடுத்தார்.
பதவியில் இல்லாதபோது கூட தனது சொந்த பணத்தில் பல உதவிகளை செய்துள்ள அவர் மக்களையும் சிரித்த முகத்துடன் அணுகினார். இந்நிலையில் அவர் உயிருடன் இருந்தவரை அரசியல் பக்கம் வராத அவரது மகன் விஜய் வதந்த், இப்போது அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார்.
தொகுதிக்கு செல்லும் விஜய் வசந்த் மக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம் செய்கிறார். நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒன்றே கால் லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியைத் தன் சொந்த செலவில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
இதனிடையே குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் சிட்டிங் எம்.எல்.ஏக்களாக இருக்கும் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி மூவருமே சீட் கேட்கும் ரேஸில் இருக்கிறார்கள். இதற்கு நடுவே விஜய் வசந்த் நாடாளுன்ற சீட் பெருவாரா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
newstm.in