1. Home
  2. தமிழ்நாடு

வசூல் ராஜா பட நடிகர் இறந்துவிட்டாரா..?

Q

வசூல் ராஜா படத்தின் கமலின் ரூம் மேட்டாக வரும் ஸ்வாமிநாதன் அல்லது சாம்பு மவன் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். 'What is the procedure to Change the room ' படம் முழுவதும் ஒரே டயலாக் சொல்லியே பிரபலமானவர். வசூல் ராஜா படத்தைத் தொடர்ந்து இவருக்கு என்ன ஆனது என பலர் இணையத்தில் தேடி வருகிறார்கள். அந்த வகையில் ரெட்டிட் சமூக வலைதளத்தில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்லது. 

இப்படத்தில் சாம்பு மவன் கதாபாத்திரத்தில் நடித்தவரின் நிஜப் பெயர் ரத்தின சபாபதி. ரெட்டிட் சமூக வலைதளத்தில் இவர் தற்போது என்ன செய்து வருகிறார் என சில ஆண்டுகள் முன்பு கேள்வி எழுப்பினார் ரசிகர் ஒருவர். இதற்கு மற்றொரு நபர் பதில் அளித்தார். ரத்தின சபாபதி தனது சகோதரனின் கிளாஸ் மேட் என்றும் ஒரு விபத்தில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். இது குறித்து கூடுதலாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை

Trending News

Latest News

You May Like