இந்தியாவில் அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம்..? 600 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வந்த 25000 பேர்..!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் குஜராத்தில் 10 பணியிடங்களுக்கு 1,800 பேர் விண்ணப்பம் செய்து இருந்ததாகவும் ஒரே நேரத்தில் அனைவரும் வருகை தந்து முண்டியடித்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி வேலையில்லா திண்டாட்டத்தில் நிலைமையை வெளிச்சம் போட்டு காட்டியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மும்பையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் அறிவிக்கப்பட்ட 600 பணியிடங்களுக்கு 25,000க்கும் மேற்பட்டோர் நேர்காணலுக்கு திரண்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விமானத்தில் சரக்குகளை ஏற்றி, இறக்கும் வேலைக்காக ரூ, 22,000 சம்பளத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இதற்காக ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பத்துடன் திரண்டனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பெட்டியில் போட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இந்தியாவில் வேலை இல்லாமல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட இரண்டு சம்பவங்கள் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது
#Watch | 600 jobs, 25,000 seekers: #AirIndia drive sets off stampede fear in Mumbai.
— NDTV (@ndtv) July 17, 2024
Read more: https://t.co/rLTyCfupfM pic.twitter.com/imJ8W7BNwF