“இவரு உங்க வாடகை புருஷனா?” : பிக்பாஸ் பிரபலத்திடம் நெட்டிசன்கள் கேள்வி!!

பிக் பாஸ் 14 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ராக்கி சாவந்த் பிக் பாஸ் 15 வீட்டிற்கு ஒயில்டு கார்டு என்ட்ரியாக வந்துள்ளார், அவருடன் அவரது காதல் கணவரும் வந்திருக்கிறார்.
நடிகை ராக்கி தனக்கு திருமணமாகிவிட்டது என்று முன்பு தெரிவித்தபோது அவர் பொய் சொல்கிறார் என்றே அனைவரும் நினைத்தார்கள். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ரித்தேஷை பார்த்த சல்மான் கான், இவரை வாடகைக்கு அழைத்து வந்திருக்கிறீர்களா என ராக்கி சாவந்தை கேட்டார்.
அதற்கு ராக்கி சாவந்த், இவர் தான் என் ஒரே கணவர் என்றார். சல்மான் கானுக்கு ஏற்பட்ட அதே சந்தேகம் தான் பிக் பாஸ் பார்வையாளர்களுக்கும் ஏற்பட்டது. ஏனென்றால் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது முதல்முறையாக ராக்கி தனது கணவரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
ஆனாலும் நெட்டிசன்கள் ராக்கியை நம்பத் தயாராக இல்லை. ராக்கி பற்றி பேசிய ரித்தேஷ், ராக்கி பொய் சொல்ல மாட்டார் என்று கூறினார். திருமணத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்று தாம் அவரிடம் கூறியதாகவும், தன் புகைப்படங்களை வெளியிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
ராக்கி சாவந்த் தனக்காக பல அவமானங்களை தாங்கியிருக்கிறார் என்று அவரது கணவர் ரித்தேஷ் கூறியுள்ளார்.
newstm.in