27 வருஷங்களா இயக்குநர் ஷங்கருக்கும் இளையராஜாவுக்கு இதனால் தான் தீராத கோபமா?

தமிழ் சினிமாவில் இசை சாம்ராஜ்யம் கட்டி, தனி ராஜாங்கம் நடத்தி வருபவர் இளையராஜா. தமிழ் சினிமாவின் வியாபார சந்தையை உலகளவில் கொண்டு சேர்த்தவர் இயக்குநர் ஷங்கர். ஆனால், இவர்கள் இருவரும் இதுவரையில் சேர்ந்து ஒரு படத்தில் கூட இணையாமல் இருப்பதற்குப் பின்னால் 27 வருட பகை இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இளையராஜாவும், ஷங்கரும் இதுவரை எந்த ஒரு படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை என்றாலும் இவர்கள் இருவருமே ஷங்கரின் முதல் படத்திலேயே இணைந்திருக்க வேண்டியது. இயக்குநர் ஷங்கரின் முதல் படத்தில் இசை இளையராஜா தான் என்று முடிவாகி, இசைப் பணிகள் துவங்கிய நிலையில், இளையராஜாவின் முன்கோபத்தால் அந்த முயற்சி அப்படியே கைநழுவி விட்டதாக கோலிவுட்டின் மோஸ்ட் ஹிட்டடித்த வலைப்பேச்சு நண்பர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஷங்கர் முதன்முதலாக இயக்குநராக அறிமுகமான படம் ஜென்டில்மேன். இந்த படத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதற்கு முன்னர், ஷங்கரும், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சு மோகனும் சேர்ந்து இளையராஜா தான் இந்த படத்தில் இசையமைக்க வேண்டும் என நினைத்திருந்தார்கள். ஆனால், இளையராஜாவின் நண்பரான இயக்குநர் ஒருவரின் படத்தில் நடிக்கவிருந்தவரை, தன் படத்தில் நடிப்பதற்கு ஷங்கர் அழைத்துக் கொண்டதால் அந்த நண்பரின் படம் கைவிடப்பட்டது. அந்த படத்திற்கும் இசை இளையராஜா தான்.
இந்நிலையில் அதே நடிகரின் படத்தை இயக்குவதாக ஷங்கர் இளையராஜாவின் அலுவலகத்திற்குச் சென்று பாடல்கள் வாங்குவதற்காக நெடு நேரம் காத்திருந்தாராம். அதன் பின்னர், காத்திருக்க வைத்த கடுப்பை மொத்தமாக இறக்கி வைக்க நினைத்த ஷங்கர், பதிலுக்கு இளையராஜா போட்ட ட்யூன்கள் எதுவும் சரியில்லை என்று கூறி, அவற்றை எல்லாம் ரிஜெக்ட் செய்துள்ளார்.
இதனால் டென்ஷனான இளையராஜா, உன்னுடைய படத்திற்கு பாடல்கள் போட முடியாது எனக் கூறி அனுப்பிவிட்டாராம். இருவரின் ஈகோ பிரச்சனையால், ஒரு நல்ல காம்பினேஷன் தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு விருந்து படைக்காமலேயே போய்விட்டது.