1. Home
  2. தமிழ்நாடு

ஒரு பேராசிரியை நடுரோட்டில் செய்யும் காரியமா இது..?: கொந்தளிக்கும் பொதுமக்கள்..!

ஒரு பேராசிரியை நடுரோட்டில் செய்யும் காரியமா இது..?: கொந்தளிக்கும் பொதுமக்கள்..!


தனது கார் மீது பழவண்டி ஒன்று லேசாக உரசியதால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், வண்டியில் இருந்த பழங்கள் அனைத்தையும் சாலையில் தூக்கியெறியும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியது. அதில், தள்ளுவண்டியில் இருந்த பழங்களை பெண் ஒருவர் சாலையில் வீசி எறியும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. தற்போது அந்த வீடியோ குறித்த செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஒரு பேராசிரியை நடுரோட்டில் செய்யும் காரியமா இது..?: கொந்தளிக்கும் பொதுமக்கள்..!
அந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அயோத்தியா நகரில் நடந்துள்ளது. அந்த வீடியோவில், சாலையில் பழங்களை வீசியெறிந்த பெண் தனியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் என்று கூறப்படுகிறது.

அந்தப் பெண் வந்த கார் மீது சாலையில் வந்த தள்ளுவண்டி உரசியதாகவும், அப்போது காரில் சிறு கீறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், தள்ளுவண்டியில் பழங்களை வைத்து விற்பனையில் ஈடுபட்ட நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன், தள்ளுவண்டியில் இருந்த பழங்களையும் சாலையில் வீசி எறிந்துள்ளார்.

உச்சி வெயிலில் உழைக்கும் எளிய மனிதரை வேதனைப்படுத்திய காரியம் நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்துள்ளது. பொருளாதார ரீதியாக உயர்ந்து காணப்பட்டால் எளிய மக்களை நசுக்கும் விதமாக நடந்து கொள்வது மனிதாபிமானம் அற்ற செயல் என பலரும் தெரிவித்துள்ளனர்.

காரில் வந்த அந்தப் பெண்ணின் செயலுக்கு நெட்டிசன்கள் மட்டும் அல்லாமல் பிரபலங்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், கார் புதிதாகவே இருக்க வேண்டும் என்றால் காரை வீட்டிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று பதிவிட்டு சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது அந்த மாநிலத்தின் உயர் அதிகாரிகள் பார்வைக்கும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like