1. Home
  2. தமிழ்நாடு

மகனுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக இப்படி செய்வதா ? பாஜவுடன் பாமக கூட்டணி குறித்து காடுவெட்டி குருவின் மகள் விமர்சனம்!

1

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடக்கிறது. இதை அடுத்து திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான தொகுதிகளையும் ஒதுக்கி கொடுத்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் திணறி வருகின்றன.

அதிமுக – பாமக கூட்டணி உறுதி என இருந்த நிலையில் திடீர் என்று திண்டிவனம் அருகே தைலாவரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதாக முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜக – பாமக இடையிலான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அப்போது பாஜகவுடன் கூட்டணி உறுதியான நிலையில் கட்சியில் இருந்து வரிசையாக விலகுவதாக இணையத்தில் பாமக தொண்டர்கள் பதிவு செய்து வருகின்றனர். ‘கண்டிப்பாக எங்க தொகுதியில் பாஜக கூட்டணிக்கு ஓட்டு போடமாட்டோம்.

இடஒதிக்கீடு துரோகிகளுக்கு என்றும் ஓட்டு இல்லை ‘வன்னியர் ஓட்டு பாஜகவுக்கு இல்லை’ என விமர்சனம் செய்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். மேலும் சிலர் ‘பாமக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி கொள்கிறேன். யார் மீதும் எந்த கோபமும் இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவு’ என்று பதிவு செய்து வருகின்றனர்.

இதனை தவிர பாஜக – பாமக கூட்டணியை விமர்சிக்கும் வகையில் பாமக தொண்டர்களே மீம்ஸ் பதிவு செய்து வருகின்றனர். காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை கூறுகையில்;-

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக மற்றும் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியோடு பாமக கூட்டணி அமைத்து இருப்பது ஏற்கத்தக்கது அல்ல.

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் கலவரம் ஏற்படும் என்று தற்குறித்தனமாக கூறும் அண்ணாமலை தலைமையிலான பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் வன்னியர் மக்களுக்கு என்ன பயன்? தற்போது கூட்டணி வைத்து 10 நாடாளுமன்ற தொகுதிகளை பெற்றுள்ளனர்.

இதனால் வன்னியர் மக்களுக்கு என்ன பயன்? டாக்டர் ராமதாஸ் அவர்கள் தன்னுடைய அன்பு மகனுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டும் என்றால் தந்தையும் மகனும் வேண்டுமென்றால் பாஜக கட்சியில் இணைந்து கொள்ள வேண்டியதுதானே? ஏன் என் பின்னாடி வன்னியர் சமூகம் உள்ளது என வன்னிய மக்களை ஏமாற்றுகிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like