1. Home
  2. தமிழ்நாடு

ஒரு கணவர் செய்யுற வேலையா இது : மனைவியின் நிர்வாண வீடியோக்களை ரூ. 47 லட்சத்துக்கு விற்ற நடிகையின் கணவர்..!

1

பிரபல இந்தி கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ரித்தேஷை திருமணம் செய்து பிரிந்தார். பின்னர் ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே ஆதில் கான் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது பணத்தை எடுத்துக்கொண்டதாகவும் மும்பை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதில் கானை கைது செய்தனர்.ராக்கி சாவந்த் கொடுத்த புகாரின் காரணமாக, மைசூர் சிறையில் அடைக்கப்பட்ட ஆதில் கான், சில நாட்களுக்குப் முன்பு ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்துள்ள ராக்கி சாவந்த் கூறியதாவது:-என் நிர்வாண வீடியோக்களை ரூ. 47 லட்சத்திற்கு விற்பனை செய்திருக்கிறார் ஆதில். நான் பாத்ரூமில் இருந்தபோது வீடியோ எடுத்திருக்கிறார். அது போன்று பல வீடியோக்கள் எடுத்தார். நான் அவரின் மனைவி. ஆனாலும் அவர் வீட்டில் வைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

அந்த வீடியோக்கள் வைரலாகிவிட்டால் நான் என்ன செய்வேன். விஷம் குடித்து தற்கொலையா செய்ய முடியும்? நான் எங்கு செல்வேன்?. இந்த உலகம் என் நிர்வாண வீடியோக்களை பார்த்துவிட்டு எங்கு செல்லும்?. நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளியே வருவேன்?.

நான் சாதாரண பெண் இல்லை. இந்தியாவின் பிரபலம். நான் ஒரு பிராண்டு. ஒரே ஆண்டில் எனக்கு தலாக் ஆகிவிட்டது என்றார்.

ஆகஸ்ட் 20ம் தேதி மும்பையில் புகைப்படக் கலைஞர்களை சந்தித்தார் ஆதில் கான் கூறியதாவது, ராக்கி சாவந்தும், அவரின் ஆட்களும் வேண்டும் என்றே என் மீது புகார் தெரிவித்து வருகிறார்கள். என் பக்க கதையை நான் சொல்கிறேன். அவர் எப்படி என்னை ஃபிரேம் செய்கிறார் என்பதை விளக்குவேன். விரைவில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வேன் என்றார்.

Trending News

Latest News

You May Like