இவர்தான் புதிய ஜேம்ஸ் பாண்ட் 007 ?

ஒருவழியாக ஜேம்ஸ் பாண்டை கண்டுபிடித்துவிட்டது ஹாலிவுட் திரையுலகம். திரைப்படத்தின் கதையோடு பயணிக்கும் ஒரு கதாபாத்திரம் பிரபலமாகி விட்டால் அதை வைத்து அடுத்தடுத்த பாகங்களை இயக்குவார்கள். அந்த வரிசையில் ஜேம்ஸ்பாண்ட் என்ற துப்பறியும் ஒரு கதாபாத்திரம் உலக பேமஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.
தற்போது வரை ஜேம்ஸ்பாண்ட் கதைக்களம் என்று எடுத்துக்கொண்டால் 24 திரைப்படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பல பல பாகங்களிலும் பல ஹீரோக்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருக்கின்றனர் அந்த வரிசையில் தற்போது ஜேம்ஸ்பாண்ட் ஆக இருப்பவர் டேனியல் கிரெய்க்.
டேனியல் க்ரேய்க் இனிமேல் நான் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார். எனவே ஹாலிவுட் ரசிகர்கள் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் ஆக யார் இருப்பார்கள் என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில் அந்த இனிய செய்தி தற்போது கிடைத்திருக்கிறது.
ஸ்பைடர்மேன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிறகு தனி திரைப்படமான "வெனம்" திரைப்படத்தில் வெனமாக நடித்தவர் தான் நம் "டாம் ஹார்டி" இவர்தான் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் அதிகாரபூர்வ தகவல் தற்போது கிடைத்துள்ளது. இவரது ஜேம்ஸ்பாண்ட் அவதாரம் எப்போது திரையில் தோன்றும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
newstm.in