1. Home
  2. தமிழ்நாடு

நம்ம கேப்டன் விஜயகாந்த்-ஆ இது? கண்கலங்க வைக்கும் கேப்டனின் புது புகைப்படம்!

1

கேப்டன் விஜயகாந்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனால், உயிர் காப்பாற்றப்பட்டது.அதிலிருந்தே, விஜயகாந்த் வீட்டிலேயே இருந்து வருகிறார். பொது நிகழ்ச்சிகளில், பங்கேற்பது இல்லை.முழுமையாக பேச முடியவில்லை. சைகையில் தான், நினைப்பதை உணர்த்துகிறார்....

இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு அவர் தனது குடும்பத்துடன் கொண்டாடும் புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படத்தில் நன்கு உடல் மெலிந்து விஜயகாந்த் காணப்படுகிறார்.

எப்படி இருந்த மனுசன் இப்படி ஆகிவிட்டாரே என அவரது ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.பழைய திரைப்படங்களில், கம்பீரமான விஜயகாந்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் கட்சி தொண்டர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து கண்ணீர் விடுகின்றனர்.

1

Trending News

Latest News

You May Like