இது தேவையா..?ரீல்ஸ் வீடியோவிற்கு ஆசைப்பட்டு விஷமுள்ள பாம்பிற்கு முத்தமிட முயன்றவரின் நாக்கை கடித்த பாம்பு..!

உ.பி., உள்ள ஹபைத்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜிதேந்திர குமார் 50, இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, சமூக ஊடகத்தில் புகழ் பெற வேண்டும் என்று எண்ணி, ஒரு கொடிய விஷமுள்ள பாம்பை பிடித்து அதனுடன் இருந்தபடி வீடியோ எடுத்து படமாக்கினார்.
இதை அருகில் இருந்தவர்களும் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவில் ஜிதேந்திர குமார் பாம்பை தனது கழுத்தில் சுற்றிக்கொண்டு மெதுவாக அதன் தலை மீது வாயை நீட்டிய போது அவரது நாக்கில் பாம்பு கடித்தது. இதை கண்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடித்த பிறகு குமாரின் உடல்நிலை வேகமாக மோசமடைந்தது. அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மொராதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு ஐ.சி.யூ.,வில் உள்ள அவரது உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.