1. Home
  2. தமிழ்நாடு

ரீல்ஸ்காக இப்படியா..?நடுரோட்டில் கொலை செய்வது போல நடித்த 2 பேர்..!

Q

ரீல்ஸ்காக ரத்தம் தெறிக்க, தெறிக்க கொலை செய்வது போல் வீடியோ எடுத்து 2 பேர் பொதுமக்களை அலறவிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

 

இதுபற்றிய விவரம் வருமாறு; கர்நாடகாவில் கலபுரகி மாவட்டத்தில் ஹம்னபத் ரோடு பரபரப்பாக காணப்பட்ட தருணம். ஒவ்வொருவரும் அவரவர் வேலைகளில் ஆழ்ந்து இருக்க, ஒருவர் மற்றொருவரை நடுரோட்டில் ரத்தம் தெறிக்க, தெறிக்க கொலை செய்வது போல ஒரு சம்பவம் நடந்தது.

 

ரோட்டில் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் ஒருவர் படுத்திருக்க, அவரின் மீது ஏறி உட்கார்ந்த மற்றொருவர் முகம் முழுவதும் ரத்தத்தை பூசியவாறு 2 கைகளையும் அகல விரித்து கத்துவது போல செய்திருக்கிறார். ஏதோ மிக பெரிய விபரீதம் அரங்கேறிவிட்டது என்று அங்கே இருந்த மக்கள் பீதி அடைந்து ஓட ஆரம்பித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது அங்கிருந்த 2 பேரிடம் விசாரிக்க, அவர்கள் இருவரும் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்யவே இவ்வாறு நடந்து கொண்டது தெரிய வந்தது.

உடனடியாக, அவர்களை இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெயர் சாய்பன்னா, சச்சின் என்பது தெரிந்தது. இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Trending News

Latest News

You May Like