பணத்திற்காக இப்படியா ?சொந்த தங்கையைத் திருமணம் செய்து கொண்ட அண்ணன்..!

உ.பி ஹத்ராஸ் மாவட்டத்தில், மாநில அரசு சார்பில் முக்யமந்திரி சாமுஹிக் விவா யோஜனா திட்டத்தின் கீழ் பல தம்பதிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய தம்பதிகளுக்கு இலவசமாகத் திருமணம் செய்து வைப்பதுடன், தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கி, ரூ35,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த நிதியைப் பெறுவதற்காக அண்ணன் தங்கை தம்பதிகளைப் போலத் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே திருமணமான தம்பதிகளும் இந்தப் பணத்தை பெறுவதற்காக மறுமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று கொடுக்கப்பட்ட பணம் மற்றும் பிற பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அரசின் திட்டத்தில் முறைகேடு செய்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.