நடிகர் அஜித்திற்கு ‘தல’ன்னு ஏன் பேர் வந்தது தெரியுமா? லைலா வெளியிட்ட புகைப்படம் !!

நடிகர் அஜித்திற்கு ‘தல’ன்னு ஏன் பேர் வந்தது தெரியுமா? லைலா வெளியிட்ட புகைப்படம் !!

நடிகர் அஜித்திற்கு ‘தல’ன்னு ஏன் பேர் வந்தது தெரியுமா? லைலா வெளியிட்ட புகைப்படம் !!
X

தமிழ் திரையுலகில் கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் லைலா அறிமுகமானார். தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களான விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடித்துள்ளார். தில், தீனா, மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.

இவர், ஈரான் நாட்டு தொழில் அதிபரான மெஹதீன் என்பவரை காதலித்து 2006 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என கூறினார். ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் 2001 ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் தீனா.

இந்த திரைப்படத்தில் அஜித் மற்றும் லைலா, சுரேஷ்கோபி போன்ற பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்குப் பிறகு தான் அஜித் அவர்களுக்கு தல என்ற பெயர் கிடைத்தது. இந்த திரைப்படத்தில் ரவுடியாக இருக்கும் அஜித்தை அவரது நண்பர்கள் தல என்று அழைப்பார்கள்.

இந்த திரைப்படத்தில் அஜித் அவர்களின் நடனமும் மிகவும் பாராட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த லைலா அவர்கள் அவரது பிளாஷ்பேக்கை பகிர்ந்துள்ளார்.

அதாவது இந்த திரைப்படத்தில் ‘காதல் வெப்சைட்’ என்ற பாடல் படமாக்கப்படும் பொழுது இவருக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாகவும், இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தும் பாடலில் அது தெரியாதவாறு இவர் நடித்து இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதற்கு காரணம் அந்த பாடலில் உள்ள எனர்ஜி தான் என்று தெரிவித்திருக்கிறார் லைலா.

Newstm.in

Tags:
Next Story
Share it