1. Home
  2. தமிழ்நாடு

மினுமினுக்கும் சென்னை! புதுபொலிவுடன் அரசினர் தோட்டம் சுரங்கப்பாதை!!

மினுமினுக்கும் சென்னை! புதுபொலிவுடன் அரசினர் தோட்டம் சுரங்கப்பாதை!!


சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசினர் தோட்டம் சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பழைய அண்ணா சுரங்கப்பாதை உள்ளது. இப்போது அவை நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டு உள்ளது.
 
இப்போது உள்ள மெட்ரோ ரயில் நிலைய நுழைவு கட்டமைப்புகளில் இருப்பது போன்று அழகிய கிரானைட் தளம், டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்ட சுவர்கள், புதிய விளக்குகளுடன் சுரங்கப்பாதை புதுப்பிக்கப்பட்டு உள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலைய பொதுத்தளத்திற்கு சுரங்கப்பாதை நேரடியாக இணைக்கப்பட்டு உள்ளது.

மேலும் வாலாஜா சாலை, எல்லீஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் அண்ணாசாலை ஆகிய இடங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி மெட்ரோ ரெயில் பயணிப்பதுடன் சாலையை எளிதில் கடக்கலாம்.

காதிபவன் மற்றும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றையும் இந்த அண்ணா சுரங்கப்பாதை இணைக்கிறது.

சென்னையின் பேருந்துகளில் பயணித்து சாலையில் நடந்து பின்னர் இந்த சுரங்கப்பாதையில் இறங்கிச் சென்றால் ஏதே வெளிநாடுகளில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல வழிகளில் சுரங்கபாதை இணைக்கப்பட்டுள்ளதால் மக்கள் குழப்பம் அடையாதவாறு ஆங்காங்கே பல பகுதிகளிலும், வழிகாட்டும் திசையிலும் பெயர் பலகை வைக்கப்பட்டு மக்களுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது.

newstm.in 

Trending News

Latest News

You May Like