தவெக புது தேதி இதுவா ? புதிய அறிவிப்பு எப்போது ?
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியின் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மாநாட்டிற்காக காவல்துறையை அனுமதிக்கு விண்ணப்பம் செய்திருந்த நிலையில் காவல்துறையினர் மாநாடு நடக்கும் இடத்தை ஆய்வு செய்து சில கேள்விகளை கேட்டதாகவும் அதற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்ததாகவும் செய்திகள் வெளியானது.
குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே மாநாடு நடத்தப்படுவதால் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறு ஏற்படக்கூடாது என்றும் காவல்துறை அனுமதித்த இடங்களை தவிர வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று உள்ளிட்ட 33 நிபந்தனைகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவெக கட்சியின் முதல் அரசியல் மாநில மாநாடு இந்த மாதம் 23ஆம் தேதி நடத்துவதற்கு காவல்துறையால் 33 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் மாநாடு ஏற்பாட்டுக்கு குறுகிய காலமே உள்ளதால் அக்டோபர் 15ஆம் தேதி மாநாடு நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான அனுமதி பெறுவதற்கு நாளை தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி.ஆனந்த் விக்கிரவாண்டி காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து கடிதம் வழங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.