இது கனவா..? இல்ல நிஜமா..? தொடர்ந்து 7ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை..!

உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கம் விலை கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து அதிகரித்து வந்தது.
நேற்று முன்தினம் (ஜூன் 26) ஆபரண தங்கம் கிராம் 9,070 ரூபாய்க்கும், சவரன் 72,560 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று (ஜூன் 27) தங்கம் விலை கிராமுக்கு, 85 ரூபாய் குறைந்து, 8,985 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 680 ரூபாய் சரிவடைந்து, 71,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில், இன்று (ஜூன் 28) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.55 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,930க்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்துள்ளது.